CSIRT-TN-ன் நோக்கம்
- ஐடி(IT) பாதுகாப்பு தரநிலைகள், நடைமுறைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்கப்படுத்துதல் அதன் மூலம் தமிழ்நாட்டின் சைபர் வெளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மாநில அளவில் தலைமை வகிப்பது.
- சைபர் வெளி பாதுகாப்பு நிகழ்வுகளுக்கு பதிலளிப்பதில் நம்பகமான முகமையாக திகழ்வது
- சைபர் வெளி பாதுகாப்பு துறைக்கான திறன்களை வளர்ப்பதில் தலைமை வகிப்பது.
- பாதுகாப்பு கட்டமைப்பு சட்டகத்தை நிறுவுவதன் மூலம் முழு துறைக்கும் உள்கட்டமைப்பு பாதுகாப்பை உறுதிசெய்வது.
- CSIRT-TN இன் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக துறைகளில் உள்ள முக்கியமான கணினிகள் ஒரு களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்
- ஆவண மேலாண்மை அமைப்பின் மூலம் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இந்த வார உதவிக்குறிப்பு!
இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்
வலுவான கடவுச்சொல்லை வைத்திருப்பது முக்கியம், ஆனால் இரண்டு அல்லது பல காரணி அங்கீகாரத்தைக் கொண்டிருப்பது இன்னும் மிக முக்கியம். இந்த முறையானது இரண்டு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது, எனவே உங்கள் கடவுச்சொல்லை ஒரு ஹேக்கர் மிக சரியாக துல்லியமாக யூகிக்க முடிந்தாலும் கூட உங்கள் கணக்கின் பாதுகாப்பு மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் பாதுகாப்பு நமக்கு கிடைக்கிறது..
044-24962400, 044-24962411, 044-24962412, 044-24962413 Ext:303 (Working Hours 09:00 - 18:00)
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? தயவுசெய்து எவ்வித தயக்கமுமின்றி எங்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள், எங்கள் குழு மிக விரைவில் உங்களைத் தேடிவரும் .
→
info[DOT]csatn[At]tn[DOT]gov[DOT]in
→