CSIRT-TN செயல்திட்டம்
“CSIRT-TN மாநிலத்தின் தகவல் சொத்துக்களை ஐ.சி.டி(ICT) அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, கண்டறிய, மேற்பார்வையிட, முன்னறிய, எதிர்வினை மற்றும் முன்வினையாற்ற பாடுபடும். மேலும் சைபர் நிகழ்வுகளுக்கான நம்பிக்கையான ஒற்றைப்புள்ளி தொடர்பு மையமாக இருந்து மாநிலத்தின் மிக முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின் மீளமைவினை உறுதிசெய்யும்”
- மாநிலத்தின் சைபர் உள்கட்டமைப்பின் மீளமைவினை உறுதிசெய்தல்;
- சைபர் நிகழ்வுகளுக்கு முறையான செயல்திறன் மிக்க, எதிர்வினை மற்றும் முன்வினையாற்றக்கூடிய பதிலீட்டு உள்கட்டமைப்பை வழங்குதல்;
- நிகழ் நேர மற்றும் தொடர்ச்சியான இணைய அச்சுறுத்தல்களிலிருந்து முக்கியமான தகவல்களையும் உள்கட்டமைப்பையும் கண்காணித்தல்;
- உலகளாவிய சைபர் நுண்ணறிவைச் சேகரித்து அதன் மூலம் இணைய அச்சுறுத்தலைக் கணித்தல் மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் நிர்வாகத்திற்குத் தயாராதல்;
- தரவு மற்றும் அதன் சேகரிப்பு அமைப்புகளுக்கான செயல்திறன்மிக்க மற்றும் உகந்த பாதுகாப்பிற்காக பாதிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு செய்தல்;
- சரியான மற்றும் திறமையான சைபர் கிரைம் விசாரணை, சான்றுகள் சேகரிப்பு மற்றும் தடயவியல் பகுப்பாய்வு;
- மாநில மற்றும் தேசிய அளவிலான சி.எஸ்.ஐ.ஆர்.டி(CSIRT) சைபர் நிகழ்வுகளுக்கான எதிர்வினையாற்றும் குழுக்களிடையேயான தொடர்பு ஒருங்கிணைப்பு;
- சைபர் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு, அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்;
இந்த வார உதவிக்குறிப்பு!
இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்
வலுவான கடவுச்சொல்லை வைத்திருப்பது முக்கியம், ஆனால் இரண்டு அல்லது பல காரணி அங்கீகாரத்தைக் கொண்டிருப்பது இன்னும் மிக முக்கியம். இந்த முறையானது இரண்டு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது, எனவே உங்கள் கடவுச்சொல்லை ஒரு ஹேக்கர் மிக சரியாக துல்லியமாக யூகிக்க முடிந்தாலும் கூட உங்கள் கணக்கின் பாதுகாப்பு மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் பாதுகாப்பு நமக்கு கிடைக்கிறது..
044-24962400, 044-24962411, 044-24962412, 044-24962413 Ext:303 (Working Hours 09:00 - 18:00)
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? தயவுசெய்து எவ்வித தயக்கமுமின்றி எங்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள், எங்கள் குழு மிக விரைவில் உங்களைத் தேடிவரும்